search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராக்டர் விபத்து"

    மயிலம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5 வயது பெண் குழந்தை பரிதாப உயிரிழந்தது. பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சென்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(வயது 33) கிரேன்ஆபரேட்டர். இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு 5 வயதில் சாகித்யா என்ற பெண் குழந்தை இருந்தது.

    குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் டிராக்டர் மூலம் வீட்டுக்கு தண்ணீர் கொண்டுவர கன்னியப்பன் ஏற்பாடு செய்தார். அதனைத்தொடர்ந்து அதேபகுதியை சேர்ந்த ஏகாம்பரம்(32) என்பவர் இன்று காலை டிராக்டர் டேங்க் மூலம் கன்னியப்பன் வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வந்தார். வீட்டின் முன்பு டிராக்டர் வந்து நின்றது. பின்பு டிரைவர் ஏகாம்பரம் டிராக்டரை பின்னால் எடுத்தார்.

    அப்போது அங்கு சாகித்யா விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் மீது எதிர்பாராதவிதமாக டிராக்டர் சக்கரம் ஏறியது.

    இதில் பலத்த காயம் அடைந்த சாகித்யாவை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டி வனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதை கேட்டதும் கன்னியப்பன் அவரது மனைவி இலக்கியா ஆகியோர் கதறி அழுதனர். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிராக்டர் டிரைவர் ஏகாம்பரத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அருகே வயலில் உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்ராஜ் என்ற முத்துசாமி (வயது 55). டிராக்டர் டிரைவரான இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள விவசாய வயலில் மண்ணை கொட்டிக் கொண்டிருந்தார்.

    பின்னர் அவர் அருகே உள்ள வயலில் மண்ணை கொட்டுவதற்காக டிராக்டரை வரப்பில் ஏற்றினார். அந்த சமயம் எதிர்பாராத விதமாக டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சின்ராஜ் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சின்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சின்ராஜூக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
    ஆம்பூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானதையடுத்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    குடியாத்தம் பரவக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). டிரைவர். இவர் ஆம்பூர் சர்க்கரை ஆலையில் கரும்பு லோடு இறக்கிவிட்டு, டிராக்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெங்கிலி என்ற இடத்தில் சென்றபோது எதிரே ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த டீசல் லாரி டிராக்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் செல்வமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே டிராக்டர் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள மஜீத் தெருவை சேர்ந்தவர் குத்புதீன் (வயது 65). இவர் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்று உள்ளார். 

    குத்புதீன் நேற்று மாலை மாயா பஜார் தெருவிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக அவரது பின்னாடி வந்த டிராக்டர் அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த குத்புதீன் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் குத்புதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    இதுகுறித்து குத்புதீன் சகோதரர் நசுருதீன் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் குட்டி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சாந்தா (வயது 57), ருக்கு (40), கலா (47) ஆகிய பெண்கள் கூலிக்கு வேலை செய்கின்றனர்.

    இன்று காலை ஆரணி- செங்கல் சூளையில் இருந்து டிராக்டரில் 3 பெண்களும் கட்டுமான பணிக்காக செங்கற்களை ஏற்றினர். பின்னர் டிராக்டரில் செங்கற்கள் மேல் பரப்பில் அமர்ந்தபடி சென்றனர்.

    சேத்துப்பட்டு ரோட்டில் உள்ள லட்சுமி நகர் என்ற இடத்தில் சென்ற போது, டிராக்டர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த 3 பெண்கள் மீதும் செங்கல் சரிந்தது. இதில் அவர்கள் 3 பேரும் பலத்தகாயமடைந்தனர். சிகிச்சைக்காக மீட்கப்பட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    ருக்கு நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச் சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    கந்தர்வக்கோட்டை அருகே காருக்கு வழி விட சாலையை விட்டு டிராக்டர் இறங்கியதால் திடீரென தலை குப்பற கவிழ்ந்தது. இதில் டிரைவர் பலியானார்.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கணபதிபுரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் ராகவேந்திரா (வயது 35), டிராக்டர் ஓட்டி வருகிறார்.

    நேற்று கணபதிபுரத்தில் இருந்து கந்தர்வக்கோட்டைக்கு டிராக்டரில் வந்து விட்டு பின்னர் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது பெருச்சிவன்னியம்பட்டி அருகே சென்ற போது எதிரே கார் வந்துள்ளது.

    காருக்கு வழி விட சாலையை விட்டு டிராக்டரை இறக்கியுள்ளார். திடீரென டிராக்டர் தலை குப்பற கவிழ்ந்தது. இதில் சிக்கிய ராகவேந்திரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×